புதியவை

கசிந்த...நெஞ்சமுடன்(கவிதை) - கல்முனை ஜுல்பிகா ஷெரீப்

அன்பே.....
எங்கள் ஆளுமையே....
நீங்கள் மரணித்த செய்தி கேட்டு....
நம்ப முடியவில்லையே என்னால்....
இன்னும்...இன்னும்....!
எந்தன் விழிகள் நனைகின்றன....
வேதனையோ....
நெஞ்சை...முட்டி நிற்கிறது....!

பார்த்தால்....
உங்களைப் பார்த்துக் கொண்டே....
இருக்கலாம் போலிருக்கும்....
பேசினால்....
உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே....
இருக்கலாம் போலிருக்கும்....
"அந்தச் சிரிப்பு...."
உங்களுக்கு மட்டுமே....
உரித்தான தொன்று....!

படிப்பிக்கின்ற போது....
அடிக்கடி என்னை யெழுப்பி....
கேள்விகள் கேட்பீர்கள்....
சில தடவைகள்....
ஒளித்திருந்து பார்ப்பேன்....
முன்னிருப்பவரின்....
முதுகு மறைவில்....
ஆனாலும்....
கண்டு பிடித்து விடுவீர்கள்....
அப்படியொரு....
காந்தப் பார்வை....
உங்களுக்கு....!

ஒரு தடவை....
"விழா" வொன்றில் வைத்து....
உங்களுக்கு....
"பொன்னாடை..." போர்த்தும்....
பொறுப்பினைத் தந்தார்கள்....
போர்த்துகின்ற போது....
" பாக்கியமே..." என்றேன்....
ஆனாலும்...நீங்களோ....?...?...!
"இல்லை...!

எனக்கு மிகவும் பிடித்த....
நல்ல மாணவி யொருவரின்....
மிக நல்ல கைகளால்....
போர்த்தப்படுவதை....
பெருமை என்பேன்...."
என்றீர்கள்....
என்னே...உங்கள் இதயப் பாங்கு....?!

புகழ்ச்சிக்கு மயங்காது....
சமூகத்தைப் புரிந்து கொண்டு....
வாழ்ந்தீர்கள்....
"பேதமை..." களைந்து....
"மனிதப் பெறுமதியை...."
மதித்து...நடந்தீர்கள்....
உறுதி கொண்ட உங்கள் நெஞ்சம்....
"புதுமைப் பெண்" ணாக....
பூத்தது எங்கள் நெஞ்சில்....!

"பிள்ள...." "பிள்ள...." என்றழைப்பீர்களே....
அந்த. அன்பான வார்த்தைக்குத்தான்....
அர்த்தங்கள்....
எத்தனை....எத்தனை....?!
இனி உங்களை எங்கு காண்போம்...?..
இதயம் தவிக்கிறது....
உங்களது....
இழப்பினால் துயருறும்....
இனிய குடும்பத்தவர்க்கு....
இதய ஆறுதல் கிடைக்கட்டும்....
உங்களது....
ஆத்மா சாந்தி பெறட்டும்....!!!!

( எனது அன்பு ஆசான்...திருமதி.கமலாம்பிகை லோகராஜா அவர்களின் மறைவினையொட்டிய...துயர வரிகள்.... 24 - 09 - 2015 )

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.