புதியவை

ராமேஷ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்

ராமேஷ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்


இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரையும் விடுவிக்கக் கோரி ராமேஷ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


இலங்கை கடற்படையால் நேற்று முன் தினம் இந்த 16 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். 

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 32 படகுகளையும் மீட்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் ஈடுபடவில்லை என்றும் இந்திய மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

மேலும், இந்திய இலங்கை மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை சுமூகமாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இதேவேளை 16 பேரையும், 32 படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகள் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.