புதியவை

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் இன்று பதவிப்பிரமாணம்

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் இன்று பதவிப்பிரமாணம்

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ள மல்கம் டர்ன்புல் இன்று (15) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.
கென்பராவில் ஆளுநர் நாயகம் முன்னிலையில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு நடைபெறவுள்ளது.
அவுஸ்திரேலியாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைமைத்துவத்தை டொனி அபொட் இழந்ததை அடுத்து பிரதமர் பதவியிலிருந்தும் நேற்று (14) அவர் விலகியிருந்தார்.
கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான வாக்கெடுப்பில் டொனி அபொடிற்கு 44 வாக்குகளும், டர்ன்புல்லிற்கு 54 வாக்குககளும் கிடைத்திருந்தன.
இந்த வெற்றியை அடுத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் அவுஸ்திரேலியாவில் சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.
லிபரல் கட்சியின் புதிய தலைவரான மல்கம் டர்ன்புல் அவுஸ்திரேலியாவின் 29 ஆவது புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதிய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் அவர் இன்று (15) லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
பின்னர் லிபரல் தேசிய கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.
எவ்வாறாயினும் அவுஸ்திரேலியாவின் அமைச்சரவையில் இந்த வார இறுதி வரை மாற்றங்கள் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.