புதியவை

எதிர்ப்பிற்கு மத்தியில் மத்தளை விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

எதிர்ப்பிற்கு மத்தியில் மத்தளை விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் களஞ்சியசாலையில் நெல் களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது.
எனினும், பிரதேசவாசிகள் சிலர் இன்று அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
திஸ்ஸமகாராம மற்றும் யோத கண்டிய பிரதேசங்களில் இருந்து நெல் ஏற்றிய சில லொறிகள் இன்று முற்பகல் 10.30 மணியளவில் மத்தளை சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றுள்ளன.
முதலாவது லொறி மத்தளை சர்வதேச விமான நிலைய களஞ்சியசாலையை நெருங்கிய போது சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
விமான நிலையத்திற்கு பிரவேசிக்கும் காணியை மறித்து லொறிகள் பயணிப்பதைத் தடுக்கும் வகையில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தை அடுத்து களஞ்சியசாலையின் பாதுகாப்பு உபகரணங்களையும் தீயணைப்பு உபகரணங்களையும் மத்தளை விமான நிலைய ஊழியர்கள் எடுத்துச் சென்றனர்.
விமான நிலைய வளாகத்தில் உள்ள நீர்த் தாங்கியொன்றின் மேல் ஏறி ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்ற பின்னர் பொலிஸ் பாதுகாப்பில் களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்றது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.