புதியவை

ஹம்பாந்தோட்டையில் காட்டு யானை தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய தந்தை,மகன்


ஹம்பாந்தோட்டை – மத்தள பகுதியில் காட்டு யானை தாக்குதலில் இருந்து தந்தை ஒருவரும் அவரது 4 வயது பிள்ளையும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
அடிக்கடி தனி காட்டு யானை ஒன்று நடமாடுவதால் ஹம்பாந்தொட்டை – மத்தள பிரதான வீதியில் மிகவும் அவதானமாகவே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
தனது 4 வயது பிள்ளையை ஆரம்ப பாடசாலைக்கு அழைத்துச் செல்வற்காக இன்று (11) காலை முச்சக்கர வண்டியில் சென்றுக் கொண்டிருந்த சந்தரப்பத்தில் காட்டு யானை பின்னாள் துரத்தி வந்து தாக்கியுள்ளது.
யானை துரத்துவதை கண்ட முச்சக்கர வண்டி சாரதி முச்சக்கர வண்டியை வீதியின் மறுபக்கத்திற்கு திருப்ப முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இதன் போது யானை முச்சக்கர வண்டியை தாக்குவதற்கு சென்றப்போது அந்த சந்தர்ப்பத்தில் அந்த வழியில் இரண்டு டிப்பர் வண்டிகளில் வந்தவர்கள் யானையை விரட்டியுள்ளனர்.
இந்த விபத்தில் 4 வயது சிறுவன் மற்றும் தந்தை அத்துடன் முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்து அதிர்ஷ்டவசமாக உயிரி தப்பியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஹம்பந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.