புதியவை

கொழும்பு நகரின் பல வீதிகளில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு நகரின் பல வீதிகளில் கடும்  வாகன நெரிசல்

கொழும்பு நகரின் வீதிகள் பலவற்றில் கடும் வாகன நெரிசல் நிலவியுள்ளது.
கொழும்பு நகரை சூழ அதிக மழை பெய்துவருவதால், வீதிகளில் மழை நீர் நிரம்பியுள்ளமையே போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது என பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான பிரியந்த ஜயகொடி தெரிவிக்கின்றார்.
இதன் காரணமாக வாகன சாரதிகள் வீதிகளில் தேங்கியுள்ள மழை நீரை தவிர்த்து வாகனங்களை செலுத்துவதற்கு முற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மேல் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (11) அடிக்கடி மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.