புதியவை

சரண குணவர்த்தன தொடர்ந்தும் விளக்கமறியலில்

சரண குணவர்த்தன தொடர்ந்தும் விளக்கமறியலில்

தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளரொருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்த்தன தொடர்ந்தும் எதிர்வரும்வௌ்ளிக் கிழைமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பிணை வழங்குவதற்கு கம்பஹா மாவட்ட பிரதான நீதவான் டிகிரி கே ஜயதிலக மறுத்ததையடுத்தே அவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்அடிப்படையில் எதிர்வரும் நான்காம் திகதி வரை சிறைச்சாலையில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சரண குணவர்த்தனவை ராகம அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக சிறைச்சாலை அதிகாரி இதன் போது தெரிவித்திருந்தார்.
சிறைச்சாலை வைத்தியசாலையனெ்று காணப்படும் நிலையில் சரண குணவர்த்தண அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கான காரணத்தை எதிர்வரும் 4 ஆம் திகதி நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறு நீதவான் சிறைச்சாலை அதிகரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.