புதியவை

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான யோசனை சபாநாயகரால் ஏற்பு

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான யோசனை சபாநாயகரால் ஏற்பு

அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான யோசனை சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது
அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் கொண்டுவரப்பட்ட யோசனை பாராளுமன்றத்தில் சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 48 ஆகவும் பிரதியமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின் எண்ணிக்கையை 45 அகவும் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைவாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 அகவும் பிரதியமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகவும் வரையறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் தேசிய அரசாங்கம் அமைக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென குறிப்பிடப்பட்டுள்ள சரத்திற்கு அமைவாக அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான கோரிக்ைகயை விடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தற்போது அமைக்கப்பட்டுள்ள அரசாங்கம் தேசிய அரசாங்கம் அல்ல எனவும் தேசிய அரசாங்கம் என்பது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டீ சில்வா, வாசுதேவ நாணயக்கார, சந்ரசிறி கஜதீர ஆகியோரும் இவ்வாறான கருத்தை முன்வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களை அடுத்து தமது முடிவை அறிவிப்பதற்கு சபாநாயகர் சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். இதனைத்தொடர்ந்து தனது முடிவை அறிவித்த சபாநாயகர் தற்போது அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தினை தேசிய அரசாங்கமாக வியாக்கியானப்படுத்த முடியுமென குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சி பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றைய கட்சியுடன் இணைந்து அமைக்கும் அரசாங்கத்தை தேசிய அரசாங்கமாக கருத முடியுமென சபாநாயகர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பிரதமரின் யோசனை சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.