புதியவை

திருகோணமலையில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற சந்தேகநபர் கைது

திருகோணமலையில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற சந்தேகநபர் கைது

திருகோணமலை மற்றும் பொகவந்தலாவை ஆகிய பகுதிகளில் இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
​திருகோணமலை மகாதிவுல்வெவ பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற சந்தேகநபர் ஒருவரை மொறவெவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரை இன்று (01) திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
இதேவேளை, பொகவந்தலாவையில் 11 வயது மாணவியை வேன் ஒன்றுக்குள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற 54 வயதான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று (01) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொகவந்தலாவை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.