கொட்டதெனிய சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக மரபணு பரிசோதனை நடத்துவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இந்த பரிசோதனைக்கு தேவையான தடயப் பொருட்கள் அனைத்தும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரபணு பரிசோதனை நடத்துவதற்கான அனுமதியை இன்று நிதிமன்றத்தில் பெறப்படவுள்ளது.
சிறுமியின் சடலத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தலை முடிகளையும் பரிசோதனைகளுக்காக வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஜின்டெக் நிறுவனம் இந்த பரிசோதனையை நடத்தவுள்ளது
கடந்த 12 ஆம் திகதி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஐந்து வயது சிறுமி சேயா சதவ்மியின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது .
இதே வேளை கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு பகுதியில் காணாமற்போயிருந்த நிலையில் சந்திரகுமார் ஜெருசா என்ற மூன்று வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.