புதியவை

கம்பஹாவில் கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் பிரேத பரிசோதனை இன்று

கம்பஹாவில் கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் பிரேத பரிசோதனை இன்று

கம்பஹா, நைவல, கல்பொத்த பகுதியிலுள்ள கோழிப் பண்ணையொன்றினுள் கண்டெடுக்கப்பட்ட தம்பதியினரதும், அவர்களின் 4 வயதான குழந்தையினதும் சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகள் இன்று (11) நடத்தப்படவுள்ளது.
இந்த பிரேத பரிசோதனைகள் கம்பஹா ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இவர்களின் மரணம் எவ்வாறு சம்பவித்துள்ளது என்பது குறித்து மரண விசாரணையின் பின்னர் கண்டறிய முடியும் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் கம்பஹா குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியினால் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கம்பஹா நைவல, கல்பொத்த பகுதியிலுள்ள கோழிப் பண்ணையொன்றின் உரிமையாளரும், அவரின் மனைவியும் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று (10) சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
உயிரிழந்த தம்பதியினரின் 4 வயதான பெண் குழந்தையின் சடலம் பண்ணைக் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
இதேவேளை, குறிப்பிட்ட கோழிப் பண்ணையில் இருந்த சிறியரக லொறியொன்றும் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் அந்த பண்ணையில் பணிபுரிந்த இராணுவத்திலிருந்து தப்பியோடியதாக கூறப்படும் ஒருவரும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
மூவரதும் மரணங்களும் சுமார் ஒரு வாரத்திற்கு முன்னதாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
52 வயதான கணவன் மற்றும் 49 வயதான மனைவி ஆகியோரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.