
அனகாரிக தர்மபாலவின் 151 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் இன்று (14) விஷேட நிகழ்வு இடம்பெற்றது.
பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தர்மபால உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அனகாரிக தர்மபாலவின் 151 ஜனன தின தேசிய நிகழ்வு இதன் பின்னர் ஆரம்பமாகியது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் , மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கலாநிதி தபர அமில தேரர் இதன் போது விஷேட உரையை நிகழ்த்தினார்.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.