புதியவை

எப்படி கொல்வான்...?-வலங்கைமான் நூர்தீன்



ஒரு கொலை செய்வதற்கு
ஆயத்தமாகிறான்
அதற்கு துப்பாக்கியோ
கத்தியோ தேவைப்படலாம்.
துப்பாக்கி வாங்குவது சுலபமல்ல
மாட்டிக்கொள்வான் சுலபமாகவும்.

கத்தியே உசிதமென
முன் ஜாக்கிரதையுடன்
ரப்பர் கையுறையணிந்துகொண்டு
என்றோ பத்திரப்படுத்திய
கூர் மழுங்கா ஆயுதத்தத்துடன்
கடந்துவிட்ட பின்னிரவில்
புல்லட்டில் பறக்கிறான்.

நண்பனின் அறையை
நெருங்க நெருங்க
நெஞ்சுக்குள் நெருடலாய்
அவனுக்கிழைத்த வஞ்சங்கள்.
எப்படி கொல்வான்...?
துரோகங்களால் கழுத்தறுப்பட்டு கிடப்பவனை
.
வேண்டாமென திரும்புகையில்
பார்க்கிறான்
விடிகாலை சாலையோர கசாப்புக்கடைகளில்
அறுபட்ட ஆடுகளிலெல்லாம்
இவனே தொங்கிக்கொண்டிருக்கிறான்.


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.