புதியவை

களனி கங்கை பகுதியில் இன்று பரிசோதனைகள் ஆரம்பம்

களனி கங்கை பகுதியில் இன்று பரிசோதனைகள் ஆரம்பம்

அவிசாவளையில் இருந்து அம்பத்தலே நீர்சுத்திகரிப்பு நிலையம் வரையான களனி கங்கை பகுதியில் இன்று பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை குறிப்பிடுகின்றது.
களனி கங்கையை அசுத்தமாக்கும் எவரேனும் அடையாளம் காணப்படின், அத்தகையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் தர்மசிறி தெரிவிக்கின்றார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில், களனி கங்கையின் கரையோரங்களிலுள்ள தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஏனைய கட்டடங்கள் குறித்து இன்று முதல் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் இந்த பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் பேராசிரியர் லால் தர்மசிறி கூறுகின்றார்.
குறிப்பாக சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இரசாயன பதார்த்தங்கள், கழிவுகள் கலக்கப்படுவது குறித்து இதன்போது அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.