புதியவை

டிரான் அலஸைக் கைது செய்வதற்கு எவ்வித நியாயமான காரணமும் இல்லை

டிரான் அலஸைக் கைது செய்வதற்கு எவ்வித நியாயமான காரணமும் இல்லை

ராடா நிறுவனத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவரான டிரான் அலஸை கைது செய்வதற்கு எவ்வித நியாயமான காரணமும் இல்லை என உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
டிரான் அலஸ் தாக்கல் செய்திருந்த மனுவை பிரதம நீதியரசர் கே. ஶ்ரீபவன், உயர் நீதிமன்ற நீதிரசர்களான ரோஹினி மாரசிங்க மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோர் அங்கம் வகித்த மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த மனு மீதான விசாரணை நிறைவு பெறும் வரையில் தற்போதுள்ள நிலைமையை தொடர்ந்தும் பேணுமாறு உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது
பொலிஸ் மா அதிபர் , சட்ட மா அதிபர், குற்றப்பலானாய்வுத் திணைக்களத்தின் விசேட விசாரணபை் பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வா உள்ளிட்ட சிலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்படிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நிறைவு பெறும் வரையில் தற்போதுள்ள நிலைமையை தொடர்ந்தும் பேணுமாறு உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது
சட்டமா அதிபர் பல நாட்களாக ஆட்சேபனைகளை முன்வைத்து வெளியிட்ட வாதங்கள் மற்றும் எழுத்து மூல விளக்கங்களை கருத்திற்கொண்டு உயர்நீதிமன்றம் இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது.
இதற்கமைய ஒக்டோபர் 19 ஆம் திகதி மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ரிரான் அலஸ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, சுகத் கல்தேரா மற்றும் மஞ்சுக்க பெர்னாண்டோபுள்ளே ஆகிய சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.
சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.