புதியவை

கடற்படையினரின் வாகனம் விபத்து

கடற்படையினரின் வாகனம் விபத்து


கடற்படைக்கு சொந்தமான கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளான நபர் ஒருவர் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


நேற்றிரவு சிலாபம் - கொழும்பு வீதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். 

சிலாபம் காக்கபள்ளிய பிரதேசத்தில் வசிக்க கூடிய 64 வயதுடைய முதியன்சே என்பவரே விபத்தில் காயமடைந்துள்ளார். 

கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி சென்ற கெப் ரக வாகனம் பாதையின் குறுக்காக சென்ற குறித்த நபர் மீது மோதியுள்ளதாக பெலிஸார் தெரிவித்துள்ளனர். 

கெப் ரக வாகனத்தில் பயணித்த கடற்படை அதிகாரிகளை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.