புதியவை

வித்தியா கொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு, மரபணு பரிசோதனைக்கு மீண்டும் உத்தரவு


யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 09 சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய 09 சந்தேகநபர்களும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (01) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை 09 சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணி ஒருவர் முதல் தடவையாக நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளார்.
மேலும் மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் சேகரிக்கப்பட்ட இரத்த மாதிரிகள் மற்றும் தடயப் பொருட்களினூடாக பெற்றுக் கொள்ளப்பட்ட மரபணு அறிக்கை தெளிவில்லாததால் அவற்றை மீண்டும் பகுப்பாய்விற்கு உட்படுத்துமாறும் நீதவான் எஸ். லெனின் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.