புதியவை

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆரம்பமான நடை பயணம் இன்று பளையை நோக்கிப் பயணிக்கிறது

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆரம்பமான நடை பயணம் இன்று பளையை நோக்கிப் பயணிக்கிறது

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில்நேற்று ஆரம்பமான நடை பயணம் இன்று (11) பளையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.
இன்றைய 2 ஆம் நாள் பயணம் ஆணையிறவில் ஆரம்பமானது.
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் இந்த பயணத்தில் வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் தமது உறவுகளை இழந்தவர்களும், காணாமற்போனவர்களின் உறவினர்களும் இந்த நடைப் பயணத்தில் இணைந்துள்ளனர்.
கிளிநொச்சியில் நேற்றைய தினம் ஆரம்பமான இந்த நடை பயணம், யாழ். நல்லூரில் நிறைவு பெறவுள்ளது

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.