புதியவை

அணுக்குண்டைவீழ்த்தும்ஆயுதம்-பாவலர் கருமலைத்தமிழாழன்


கற்பனையில்நாம்நினைத்துப்பார்த்திடாத
            கனவுகளைநனவுகளாய்மாற்றுகின்ற
அற்புதங்கள்பலவற்றைநடத்துகின்ற
            அறிவியலின்மேதையவர்ஓப்பன்ஈமர்
பற்பலவாய்சிந்தனையில்மூழ்கிமூழ்கிப்
            பாரழிக்கும்அணுக்குண்டாம்ஆயுதத்தை
முற்றாகத்தம்மறிவைசெலவழிந்தே
            முயற்சியுடன்செய்வதிலேவெற்றிபெற்றார் !

அழிக்கின்றஆயுதத்தைச்செய்தஅந்த
            அறிவியலின்அறிஞரிடம்அவரின்நண்பர்
அழிக்கின்றகொலைக்கருவிதனையெதிர்த்தே
            அதைத்தடுக்கும்பாதுகாப்புகருவிஉண்டோ
விழிப்பாகஇருப்பதற்கேசொல்கஎன்று
            விழிகளிலேஅச்சமுடன்பதறிக்கேட்டார்
விழியுயர்த்திச்சமாதானம்ஒன்றேஅந்த
            விபரீதம்தடுக்கின்றகருவிஎன்றார் !

அண்ணலுடன்மார்ட்டீனும்உலகில்இந்த
            அகிம்சையெனும்வழியைத்தான்போதித்தார்கள்
தண்ணீர்தான்தாகத்தைத்தீர்த்தல்போல
            தரணிதனைஅமைதியொன்றேபாதுகாக்கும்
கண்ணீரின்அவலத்தில்சுடுகாடாகக்
            கருகுதற்காஅறிவியலின்அற்புதங்கள்
எண்ணத்தில்இதைப்பதித்தேமனிதநேயம்

 என்கின்றமந்திரத்தால்வளமாய்வாழ்வோம் !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.