புதியவை

சில நாட்களுக்கு நேபாளம் செல்ல வேண்டாம்

சில நாட்களுக்கு நேபாளம் செல்ல வேண்டாம்


நேபாளில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக சில நாட்களுக்கு லும்பினிக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு இலங்கை பிரஜைகளிடம் நேபாளில் உள்ள இலங்கை தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. 


அண்மையில் இடம்பெற்ற மோதல்களால் பாதிக்கப்பட்ட இலங்கை பிரஜைகளை நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் நேபாள தூதுவர் டபிள்யு.எம்.செனவிரட்ன தெரிவித்தார். 

நேபாளில் சமஷ்டி ஆட்சி அறிமுகம் செய்யப்பட்டமைக்கு அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட மோதல்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர். 

எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக சில நாட்களுக்கு லும்பினிக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என இலங்கையர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

அவ்வாறு பயணம் செய்வதாயின் கீழ்காணும் இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி பின் பயணம் குறித்து தீர்மானிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

0097714720623
0097714720213 

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.