புதியவை

மிக நீளமான கால்களைக் கொண்ட மாடல் அழகி


அமெரிக்காவில் மாடலிங், பேஷன் ஷோ, விளம்பரங்கள் என கலக்கும் பெண்ணுக்கு மிக நீண்ட கால்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது. 6 அடி நான்கு அங்குல உயரத்துக்கு லோரென் வில்லியம்ஸ்(26), வளர்ந்திருக்கிறார்.
பெற்றோர் தொடங்கி சகோதரிகள் என குடும்பம் முழுவதும் எல்லோருமே ஆறு அடிக்கு மேல் உயரமானவர்கள். இதிலும் லோரெனின் கால்கள் சராசரியைவிட நீளமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு ப்ரூக் பேன்க்கர் என்கிற மாடல் அழகியின் கால்கள் 47 அங்குல உயரம் இருந்ததால் அமெரிக்காவிலேயே மிக நீண்ட கால்களைக் கொண்டவராக பட்டம் சூட்டப்பட்டார்.
அவரை விட உயரமான லோரெனுக்கு இடுப்பிலிருந்து அளவெடுத்தபோது மொத்தம் 49 அங்குலத்துக்கு கால்களின் அளவு இருப்பதால்(4 அடி உயரம்), அவர் ப்ரூக்கின் சாதனையை முறியடித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பூனை நடை (Cat Walk) போடும் மாடல் அழகிகளில் அவர்களது காலழகு முக்கியப் பங்கு வகிப்பது அனைவரும் அறிந்ததே.
இதனால் லோரெனுக்கும் இந்தத் துறையில் நிறைய வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. விளையாட்டு, உடற்பயிற்சி, நீச்சல் உடைகள், பேஷன் என அனைத்திலும் இவர் பட்டையை கிளப்பி வருகிறார். ஷூ-க்களின் ராஜாவாக விளங்கும், நைக்கி(Nike) நிறுவனத்தின் ஆஸ்தான மாடலாகவும் லொரென் விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பொழுதுபோக்காக வாலி பால் போட்டிகளில் இவர் விளையாடி வருகிறார்.

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.