புதியவை

விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் காயம்

விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் காயம்


கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளருமான பூ. பிரசாந்தன் வாகன விபத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


நேற்று செவ்வாய்க்கிழமை (8.9.2015) இரவு 8.30 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. 

மேற்படி பிரசாந்தன் புதுக்குடியிருப்பிலிருந்து ஆரையம்பதி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற பஸ் வண்டியுடன் மோதுண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. 

இதில் காயமடைந்த பிரசாந்தன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர். 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.