புதியவை

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளது.
புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (04) பகல் இடம்பெறவுள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதம கொரடா கயந்த கருணாதிலக்க குறிப்பிடுகின்றார்.
ஆகஸ்ட் 17 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியின் பின்னர் உருவான தேசிய அரசாங்கத்திற்கான அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது.
குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பிரேரணைக்கு பாராளுமன்றத்தின் அனுமதி நேற்று (03) கிடைத்திருந்தது.
இதனடிப்படையில் தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதம கொரடா மேலும் தெரிவித்தார்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் நேற்று 143 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக 16 வாக்குகளே கிடைத்தன.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.