புதியவை

சிட்னியில் டாக்சி ஓட்டும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

சிட்னியில் டாக்சி ஓட்டும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

1997 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமானவர் அர்ஷாத் கான்.
2005 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
58 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 56 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உள்ளார்.
2005 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற இவர், சிட்னி நகருக்குக் குடிபெயர்ந்தார். அங்கு உபேர் டாக்சி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து தற்போது டாக்சி ஓட்டி வருகிறார்.
இந்நிலையில், சிட்னியைச் சேர்ந்த இந்தியரான கணேஷ் பிர்லே என்பவர் அண்மையில் அர்ஷாத் கான் ஓட்டிய டாக்சியில் பயணித்துள்ளார்.
இது குறித்து கணேஷ் பிர்லே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ளதாவது;
நான் கொண்டு வந்த பொருட்களை ஓட்டுநர் வாங்கி டாக்சியில் வைத்தார். அப்போதுதான் அர்ஷாத் கான், பாகிஸ்தான் அணிக்காக தாம் கிரிக்கெட் விளையாடியது குறித்து என்னிடம் கூறினார். அதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் இறங்கி செல்லும் போது அர்ஷாத் கானுக்கு நன்றி சொல்லி கைகுலுக்கி விடைபெற்றேன்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.