புதியவை

இலங்கை தொடர்பிலான மனித உரிமை விசாரணை அறிக்கை இன்று வெளியிடப்படும்

இலங்கை தொடர்பிலான மனித உரிமை விசாரணை அறிக்கை இன்று வெளியிடப்படும்

ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பிலான மனித உரிமை விசாரணை அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது.
இலங்கை நேரப்படி பிற்பகல் இரண்டு மணிக்கு இந்த அறிக்கை வௌியிடப்படவுள்ளதாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் ஊடகப் பேச்சாளர் ரவீனா ஷம்தசானி நியூஸ் பெர்ஸ்டுக்கு தெரிவித்தார்.
விசாரணைகளின்போது கண்டறியப்பட்ட பாரதூரமான சம்பவங்கள் தொடர்பிலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இவற்றுக்கு தீர்வு காண்பதற்கான பரிந்துரைகளும் ஐநா விசாரணை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, இந்த நிலையில் ஜெனீவாவிற்கு சென்றுள்ள மனித உரிமை அமைப்புக்கள், இலங்கை தொடர்பில் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றன.
நேற்று முன்தினம் ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றிய ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் ஹுசைன் இலங்கை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற சில மாதங்களாக பாரதூரமான குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பிற்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்
இலங்கை சார்பில் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வழங்கிய தெளிவூட்டல் ஐநா உறுப்பு நாடுகளனின் ஆழமான கவனத்தை ஈர்த்துள்ளதாக ஜெனீவாவில் உள்ள இலங்கை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அனைத்து இன மக்களையும் சமத்துவத்துடன் ஏற்றுக்கொள்ளும் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கிவருவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.