புதியவை

பயணச் சீட்டு இன்றி பஸ்களில் பயணிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பயணச் சீட்டு இன்றி பஸ்களில் பயணிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பயணச் சீட்டு இன்றி பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறிப்பாக மேல் மாகாணத்தில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிகார சபையின் தலைவர் அமில ரண்மன்டல குறிப்பிட்டுள்ளார்.
அதன் நிமித்தம் மேல் மாகாணத்தில் பயணிக்கும் அனைத்து பஸ்களிலும் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான சுற்றி வளைப்புகளின் போது பயணச் சீட்டுகள் இன்றி பயணிப்போர் அடையாளம் காணப்படும் சந்தர்ப்பத்தில் தண்டப்பணம் விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் கூறியுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.