புதியவை

ECG கூட பார்க்கத்தெரியாத படிச்ச வைத்தியர்கள் எதற்கு நிந்தவூர் வைத்தியசாலையில் -ஊடகவியலாளர் ஜெலீல்


நிந்தவூர் வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்ட போதும் அங்கு இன்னும் தரமற்ற வைத்தியர்கள் சிலர் பணிபுரிவது ஏன்..? நேற்று முன் தினம் நிந்தவூர் வைத்தியசாலைக்கு நோயாளியாகச் சென்ற நபர் ஒருவருக்கு நடைபெற்ற நிகழ்வொன்றையே இங்கு பதிவிடுகிறேன்.


ஊரின் பிரபல தொழிலதிபர் ஒருவர் நிந்தவூர் வைத்தியசாலையின்தரமுயர்த்தப்பட்ட விடயம் அறிந்து அவருக்கு ஏற்பட்ட (சாதரண) நெஞ்சு வலி காரணமாக பரிசோதிக்கச் சென்ற போது அங்கிருந்த வைத்தியர் அவரை ECG எடுக்க சொல்லியிருக்கின்றார்.

அவரும் ECG எடுக்கும் அறைக்குச் சென்று கட்டிலில் படுக்கஅங்கிருந்த சிற்றூழியர் ஒருவர் வைத்தியராக அல்லது தாதியாக மாறி ECG யும் எடுத்திருக்கின்றார்.
பின்னர் எடுக்கப்பட்ட ECG இனை வைத்தியர் பார்த்து விட்டு "ஹே இட்ஸ் மெடிக்கல் மிராக்கள்" என்று கண்களை அகலத்திறந்து பார்த்து விட்டு உங்களுக்கு "நெஞ்சில் ஏதோ பெரிய கோளாரு ஒன்று இருக்கின்றது  நீங்கள் இப்போதே வைத்தியசாலையில் அனுமதியாக வேண்டுமெனக் கூறி  4 மாத்திரைகளை கொடுத்து உடனே சாப்பிடவேண்டும்
என்றெல்லாம் பயம் காட்டி இருக்கிறார்.சிகிச்சை பெற வந்தவர் வைத்தியர் சொல்கிறாரேயெனறு மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு.  இல்லை நான் தனியார் வைத்தியசாலையில் ஒருமுறை ECG எடுத்துக்கொள்கிறேன் என்றுகொஞ்சம் தெளிவாக பேசி விட்டு உடனே சாய்ந்தமருது தனியார்வைத்தியசாலைக்குச் சென்றிருக்கிறார்.

அங்கே மறுபடியும் ECG எடுக்கப்பட்டு அதைப்பார்த்த அங்குகிருந்த படித்த வைத்தியர் இது சாதரண வலிதான்னென்று சொன்னதும் திகைத்துப்போய்விட்டார் அந்த நபர்.
கையோடு கொண்டு சென்ற நிந்தவூர் அதிநவீன வைத்தியசாலையில் எடுக்கப்பட்ட ECG இனைக் காட்ட அந்த படித்த வைத்தியர் இது தவறாக எடுக்கப்பட்டிருக்கின்றதென்று ஒற்றைப்பார்வையிலேயே சொல்லி இருக்கிறார்.
இது தான் தரமுயர்த்தப்பட்ட வைத்தியசாலையின் நிலையா.

செல்வந்தரான அந்த நபர்
 ஏற்கனவே நிந்தவூர் வைத்தியசாலைக்கு பல உதவிகள் செய்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அந்த நபருக்கே இந்த நிலையென்றால் பாமர‌ மக்களின் நிலைதான்என்ன..???

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.