புதியவை

கஃபதுல்லாஹ்வின் புனித மண்.Julfika Sheriff


கண்மணி நபி நாதர்(ஸல்)....
ஜனனித்த மண்....
கண்ணீர் குளங்கள்...ஆறுகள்... பலவற்றை....
கண்டிருக்கும் மண்....
இரத்தக் கறைகள் படிந்தும்....
இறுதியில்.......
பெருத்த வெற்றிகளை....
பெற்றெடுத்த மண்....
சுரந்து ஓடும் "ஸம்...ஸம்..." ஊற்றினை....
சுமந்து நிற்கும் மண்....
திக்கெங்கும் புனித தீனுல் இஸ்லாத்தை....
திரும்பிப் பார்க்கவைக்கும் மண்....
தியாகத்தின் தந்தை நபி இப்றாஹீம்(அலை)யை....
தினந்தோறும் நினைவூட்டும் மண்....
ஹஜ்ஜாஜிகளால் ஆண்டுதோறும்....
கனத்திடும்...மணத்திடும் மண்....!
இறைவனின் இணையிலா இல்லம்....
எழுந்து நிற்கும்....
இந்தப் புனித மண்ணில்....
மீண்டும்....ஓரு இரத்தக்கறையா....?!
இன்னாலில்லாஹி....வயின்னா...இலைஹிறாஜிஊன்....
"ஹரம்" மிலே நடந்த தென்ன....???
ஓ...படைத்தவனே நன்கறிவான்....
படைப்புகளின் இரகஷியத்தை....
விடையும் அவனிடமே.....
விசுவாசம் கொள்வதுவே....
நம் கடமை....!
புறப்பட்டு வந்த ஹாஜிகளுக்கு....
பூமான் நபிகளாரின் ஆசியும்....
இறைவனின் எண்ணிலடங்கா அருளும்....
எப்போதுமே இருக்கும்....
இந்த மண்ணில் மரணிப்போர்க்கு....
மகத்தான ஜெயங்கள் கிடைக்கும்....
இன்ஷா அல்லாஹ்....
பொறுமை பூப்போம்....
புகழோனைப் பிரார்த்திப்போம்.....
அல்ஹம்துலில்லாஹ்......!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.