புதியவை

நட்பு - Lucia Coonghe


அனைத்தும் நீயாகி
அதற்குள் நாமாகி
அன்பில் விளைந்திட்ட
அற்புதம் நம் நட்பே !


அமிதமான பாசம்
அமுதமான நேசம்
அமைந்திட்ட யோகம்
அவனியில் நம்நட்பே!


அச்சாணியாய் வாழ்விலே
அமைந்திட்ட போதிலே
அடைக்கலமாய் உன்னிலே
அழகானது நம்  நட்பே !


அல்லலுறும் வேளையிலே
அரவணைக்கும் பொழுதிலே
அன்னையாய் கண்டேனே
அருமையான நம்நட்பிலே !


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.