புதியவை

வன்முறை என்று ஓயுமோ -மணி வண்ணன் Mani Vannanஅப்பான்னு நினைச்சேன்
அசிங்கமாய் தொட்டான்....!
சகோதரன்னு பழகினேன்
சங்கட படுத்தினான்......!
மாமான்னு பேசினேன்
மட்டமாய் நடந்தான்......!
உறவுகள் அனைத்தும்
உறவாடவே
அழைக்கின்றன.....!
பாதுகாப்பை தேடி
பள்ளிக்கு சென்றேன்.....!ஆசிரியனும்
அரவணைத்து
மறுக்காதே மதிப்பெண்
குறையும் என்றான்.....!

நட்பு கரமொன்று நண்பனாய்
தலைகோதி தூங்கென்றான்....!
மரத்த மனம்
மருண்டு சுருண்டு
தூங்கையில் கைபேசியில்
படமெடுத்தான்
அவனும் ஆண்தானே .....!
கதறி அழுது கடவுளிடம்
சென்றேன்
ஆறுதலாய்
தொட்டு தடவி
ஆண்டவன்
துணையென்றான்
பூசாரியான்..!
அலறி ஓடுகிறேன்..
எங்க போவேன்?
சமத்துவம் வந்ததென
சத்தமாய் கூறுகின்றனர்....!
பெண்னை பெண்ணாக
பார்க்காமல்
மனிதராய்
பார்ப்பது எக்காலம்?
பாவிகளின் பாலியல்
வன்முறை என்று ஓயுமோ??

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.