புதியவை

மனிதனை ஒத்த உயிரினத்தின் தொல்படிமங்கள் கண்டுபிடிப்பு (Photos)

மனிதனை ஒத்த உயிரினத்தின் தொல்படிமங்கள் கண்டுபிடிப்பு (Photos)

இரண்டு வருடங்களுக்கு முன்பாக கிடைத்த தகவலையடுத்து, தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரின் அருகில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட விஞ்ஞானிகள் அங்குள்ள குகையொன்றில் இதுவரை நமக்குத் தெரியவராத மனிதனை ஒத்த உயிரினம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
மனித பரிணாம வளர்ச்சியில் இது மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு என்று அவர்கள் தெரிவித்தனர்.
செஸோதோ மொழியில் இந்த இனத்திற்கு நலெடி(நட்சத்திரம்) என்று பெயர். சுமார் 3 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த, மனித இனத்தின் மூதாதையர்களில் ஒன்று இந்த இனம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தக் குகையில், புதைக்கப்படுவதற்கான இடமாக இருந்திருக்கக்கூடிய ஆழமான நிலவறை ஒன்றில் இருந்து 15 உடற்பாக எலும்புகளின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள விட்வடர்ஸ்ரேண்ட் பல்கலைகழகத்தின் பேராசிரியரும் அமெரிக்காவைச் சேர்ந்த படிமமானுடவியலாளரான (paleoanthropologist) லீ பெர்கர், என்பவரது தலைமையில் 60 ஆய்வாளர்கள் இங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
15 உடற்பாகங்கள் தவிர, மேலும் 1,550 படிம உறுப்புகளும் இந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது. உலகில் இதுவரையிலான அகழ்வின் மூலம் கிடைத்ததிலேயே, இதுதான் மிகவும் அதிகம் என்று கூறப்படுகிறது.
இந்த பகுதியில் மேலும் ஆயிரக்கணக்கில் இந்த இனத்தின் படிமங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது என ஆய்வுக்குழு தலைவர் லீ பெர்கர் தெரிவித்துள்ளார்.

11010502_1062276103791881_1262967268629114190_n

10629611_1062276083791883_6593044683705010311_n

11665380_1062275980458560_5876426205966511560_n

12002095_1062276087125216_206606143818422186_n
homo-naledi_650x400_51441943465

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.