புதியவை

தனிக் கட்டை - ராமன் மதிகடமையை கற்று தந்த கந்தசாமிக்கு, இதுவரை யாரும் களவு கற்றுத் தரவில்லை....

இது அவனுடைய அதிர்ஷ்டமா இல்லை துரதிர்ஷ்மா என்பதற்கு அவனுடைய கஷ்ட ஜீவனமே சாட்சி...,

ஆள், பருத்து கருத்து..... குள்ளமான உருவம்,
பார்ப்பவர்கள் இறக்கப்படலாமே தவிர, பொறாமைப் பட ஒன்றுமில்லை.

சுந்தரத்தின் மெஸ்ஸில்தான் வேலை, எவ்வளவு நாள் வேலை செய்கிறான் என்பது, அவனுக்கே வெளிச்சம்.....,

சம்பளத்திற்கு வேலை செய்கிறானா இல்லை சாப்பிடுவதற்காகவே வேலை செய்கிறானா? என்று பார்பவர்கள் நினைக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

அந்த அளவுக்கு, கள்ளம் கபடம் இல்லாமல், சாப்பிட்டு உடலை மட்டும் பெருக்க வைத்திருந்தான்.

உடம்பு வளர்ந்த அளவு விவரம் இல்லை, அதுவே சுந்தரம், இவனை இதுவரை வேலையில் வைத்திருப்பதற்கு காரணமாக கூட இருக்கலாம்.

வயது, நாற்பத்தி ஏழு,..... போன ஆவணியோடு பூர்தியாகி விட்டதாக, அவன் சித்தப்பா சொல்லித்தான் அவனுகே தெரியும்.

கல்யாணம் பண்ணிக் கொள்ளும் என்னமும் இல்லை, கல்யாணம் பண்ணினால் தான் வாழ்க்கை, என்பதில் அவனுக்கு நாம்பிக்கையும் இல்லை.

இது அவன் தத்துவ ஞானியாகி, வந்த ஞானமில்லை, சூடு பட்டதால் வந்த அனுபவம்.

ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு முன் பெண் பார்க்க சென்றபோது, ஏற்பட்ட புண்...., இன்னும் ஆராமல் நெஞ்சத்தில் வடுவாக, தங்கிவிட்டிருந்தன.

இதுவரை, சுந்தரம் மெஸ்ஸே உலகம் என்று வாழ்தவனுக்கு, இன்னொறு உலகத்தையும் காட்டிவிட வேண்டுமென பிடிவாதம் பிடித்ததோடு பெண்ணையும் தேடிக் கொண்டிருந்தார் சித்தப்பா....

அப்பா அம்மாவை சின்ன வயசில் பறிகொடுத்தவனுக்கு, அவன் சித்தப்பாவை விட்டால், வேறு நாதியேது?

பெண் பார்க்க கட்டாயப் படுத்தித்தான் அழைத்துச் செல்லப்பட்டான் கந்தசாமி.

தனக்கும், கல்யாணத்திற்கும் இந்த ஜென்மத்தில் பொருத்தமில்லை என்று என்னியிருந்தவன்.....,

சித்தப்பாவின் வற்புறுத்தலால், கழுதை வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன, என்ற மனநிலையோடுதான், பெண் பார்க்ச் சென்றான்.

பெண் வீட்டார் யாரும், இப்படி ஒரு மாப்பிள்ளையை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்தான்.

இவன் முகம் பார்த்தவுடன், பெண்ணின்
சொந்த பந்தமெல்லாம், இழவு வீட்டில்
எப்படி மூஞ்சியை வைத்திருப்பார்களோ அப்படியே....., வைத்திருந்தனர்.

பெண்ணை பெற்ற ஆத்தாவோ, பேயாட்டமே ஆடிவிட்டாள், மாப்பிளை.....'முகத்தை' பார்த்தவுடன்.

எத்தனை டாக்டரு, எத்தனை கலக்டரு, அத்தனையும் வேணாம்னுட்டேன், எம்பிள்ளை எடுப்புக்கு சரியில்லைன்ட்டு.

என் பொன்னக் கேட்டு வர, ஒனக்கு என்ன தகுதிடா இருக்கு என்று அவள் கேட்ட கேள்வி
இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே தான் இருந்தது.

மீண்டும் மீண்டும் காதில் விழுவதை, புரோட்டா மாஸ்டர் முத்து, கொத்துப் புரோட்டா தட்டிய சத்ததால், கொஞ்ச தடுத்து நிறுத்தி உதவினான்.

சுந்தரம் மெஸ்ஸில் தான் வாழ்வு, சுந்தரம் மெல்ஸில் தான் சாவு என்று விதியிருந்தால், கல்யாணமாவது; கத்திரிக்கையாவது.....,

சித்தப்பாவை சமாதானம் செய்வதுதான் அவனுக்கு பெரும்பாடாக இருந்தது, நடந்ததை கெட்ட கனவாக நினைத்து, மறக்க நினைப்பான் கந்தசாமி....

ஆனால், எதை மறக்க நினைக்கிறோமோ, அது மனதை விட்டு அகலாமல், சுற்றி சுற்றி வருவது தானே கொடுமை.

(முற்றும்)No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.