புதியவை

அமெரிக்காவில் கல்லூரி ஒன்றில் இனந்தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் கல்லூரி ஒன்றில் இனந்தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ரோஸ்பெர்க் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இனந்தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
ஒரேகன் மாநிலத்தில் உள்ள ரோஸ்பெர்க் எனும் இடத்திலுள்ள கல்லூரியொன்றில் இனந்தெரியாத நபர் ஒருவர், வகுப்பறையினுள் நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளார்.
26 வயதான இளைஞனே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக ஒரேகன் மாநில ஆளுனர் கேட் ப்றவுண் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமைக்கான நோக்கம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இவ்வாறான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அமெரிக்காவில் அதிகரித்து வருவதாக ஜனாதிபதி பரக் ஒபாமா கவலை தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.