புதியவை

யாழ்.சுன்னாகம் பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 14 பேர் கைது

யாழ்.சுன்னாகம் பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 14 பேர் கைது
யாழ், சுன்னாகம் பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, மக்கள் அமைதிக்குப் பங்கம் ஏற்படும் வகையில் நடந்துகொண்டவர்கள், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் தேடப்பட்டு வந்த சந்தேகபர்கள் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு சுன்னாகம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொது மக்களின் அமைதியைப் பேணும் பொருட்டு சுன்னாகம் பிரதேசத்தில் பொலிஸார் இரவு நேர ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.