புதியவை

வனாட்டு தீவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேருக்கு சிறைத்தண்டனை

வனாட்டு தீவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேருக்கு சிறைத்தண்டனை 

பசுபிக் கடற்பரப்பில் அமைந்துள்ள வனாட்டு தீவில் 14 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வனாட்டு தீவின் ஜனாதிபதி பால்ட்வின் லொன்ஸ்டேல் வௌிநாட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் இம்மாதம் 9 ஆம் திகதி இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்காக குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேருக்கும் அந்நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஜனாதிபதி பால்ட்வின் லொன்ஸ்டேலுக்குப் பதிலாக வனாட்டு தீவின் பாராளுமன்ற சபாநாயகர் மெர்சிலினோ பிப்பிட்டே பதில் ஜனாதிபதியாக செயற்பட்டு தாம் உட்பட 14 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மன்னிப்பு வழங்கி குறித்த குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துக் கொண்டிருந்தார்.
இருப்பினும், ஜனாதிபதி பால்ட்வின் லொன்ஸ்டேல் நாடு திரும்பியதும் மன்னிப்பை இரத்து செய்துள்ளார்.
அந்நாட்டின் துணைப் பிரதமர் மோனா கர்காசஸிடமிருந்து 312,000 டொலர்களை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கடந்த ஆண்டு  குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது மோனா கர்காசஸிற்கு 4 வருட சிறைத்தண்டனையும் ஏனையவர்களுக்கு 3 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு விரைவில் தேர்தல் இடம்பெறும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.