புதியவை

சேயா சதெவ்மி கொலை: விடுதலையான 17 வயது மாணவன் வைத்தியசாலையில் அனுமதி


சிறுமி சேயா சதெவ்மியின் கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (01) விடுதலையான 17 வயதான பாடசாலை மாணவன் உட்பட இருவரும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொட்டதெனியாவ பொலிஸாரால் அவர்கள் இருவரும் தாக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் வினவியதை அடுத்து, அவர்கள் இருவரிடமும் இன்று (02) வாக்குமூலம் பதிவுசெய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.
பொலிஸாரால் தாம் தாக்கப்பட்டதாக அவர்கள் வாக்குமூலம் வழங்கும் பட்சத்தில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
சிறுமி சேயாவின் கொலை தொடர்பான மரபணு பரிசோதனை அறிக்கையில் இந்த இருவரினதும் மரபணுக்கள் ஒத்துப்போகவில்லை என்ற காரணத்தினால், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் அவர்கள் நேற்று (01) மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.