புதியவை

அத்துமீறி பிரவேசித்து மீன் பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் கைது

அத்துமீறி பிரவேசித்து மீன் பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் கைது

இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன் பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் கைது செ்யயப்பட்டுள்ளனர்.
கரையோரப் பாதுகாப்பு படையணி மற்றும் கடற்படையினர் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறையின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் 2 படகுகளில் பயணித்த இந்திய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் இந்திக்க சில்வா தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை காங்கேசன்துறைக்கு மீன் பிடித்துறைமுகத்துக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 35 தமிழக மீனவர்கள் மற்றும் 31 படகுகளையும் விடுவிக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
அத்துடன் இந்திய மீனவர்களின் வருகையால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வட இலங்கை மீனவர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.