புதியவை

துருக்கி தலைநகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 20 பேர் பலி

துருக்கி தலைநகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 20 பேர் பலி (Video)

துருக்கியின் தலைநகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியின் தலைநகர் அன்காராவின் மத்திய பகுதியில் அமைதிப் பேரணி ஒன்றுக்காக மக்கள் கூடியிருந்த போது இந்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இரண்டு குண்டுகள் வெடித்ததாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்த மாதம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான மீள் வாக்குப்பதிவு இடம்பெறவுள்ள நிலையில், குர்து ஆயுததாரிகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் இந்தப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த குண்டுவெடிப்பிற்கு பயங்கரவாதக் குழுக்களே காரணம் என அரச தரப்பும், அரசாங்கம் தான் காரணம் என குர்து-ஆதரவு எச்டிபி கட்சியும் குற்றம் சுமத்தியுள்ளன.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.