புதியவை

2009 இல் கைதான மக்கள் விடுதலை முன்னணியினரின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது

2009 இல் கைதான மக்கள் விடுதலை முன்னணியினரின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதுஊடக ஒடுக்குமுறையை நிறுத்து, ஜனநாயகத்தை பாதுகாப்போம் எனக் குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் மூலம் அவர்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த சம்பவத்தை எதிர்நோக்கிய மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்ததன் பின்னர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதற்கமைய மனுதார்களுக்கு தலா 25,000 ரூபா நட்டஈட்டை செலுத்துமாறு உயர்நீதிமன்றம் பொலிஸ் மாஅதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியசாத் டெப், சிசிர டி ஆப்று, சுனில் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை விசாரணை செய்திருந்தது.
2009ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி குறித்து இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
நாட்டிலுள்ள பிரபல ஊடக நிறுவனமொன்றுக்கு தீ வைக்கப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில் இந்த கைது இடம்பெற்றதாகவும், நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் மனுதாரர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதால் அவர்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.