புதியவை

மத்திய மாகாணத்தில் நுகர்வோர் சட்டங்களை மீறிய 209 வர்த்தகர்களுக்கு அபராதம்

மத்திய மாகாணத்தில் நுகர்வோர் சட்டங்களை மீறிய 209 வர்த்தகர்களுக்கு அபராதம்



நுகர்வோர் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டிற்காக மத்திய மாகாணத்தில் செப்டெம்பர் மாதத்தில் 209 வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அபராதம் அறவிடப்பட்டுள்ளது.
மத்திய மாகாணம் முழுவதும் அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் மூலம் நுகர்வோர் சட்டங்களை மீறிய வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டதாக அதிகார சபையின் மத்திய மாகாண உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். நஸீர் தெரிவிக்கின்றார்.
கண்டி மாவட்டத்தில் 127 வர்த்தகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 49 வர்த்தகர்களுக்கும், மாத்தளை மாவட்டத்தில் 33 வர்த்தகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 8,25000 ரூபாவுக்கும் அதிக அபராதம் அறவிடப்பட்டுள்ளது.
நுகர்வுப் பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாமை, காலாவதியான பொருட்கள் விற்பனை, பொருட் கொள்வனவிற்காக பற்றுச்சீட்டு வழங்காமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிகார சபையினால் தொடர்ந்தும் திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் மத்திய மாகாண உதவிப் பணிப்பாளர் மேலும் கூறினார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.