புதியவை

பதுளையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பதுளையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி



பதுளை பள்ளெகெட்டுவ பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளெகெட்டுவ பகுதியிலுள்ள பாடசாலை கட்டமொன்றில் இருந்த குளவிக்கூடொன்று இன்று காலை 7.45 அளவில் கலைந்துள்ளது.
இதன்போது குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் உடனடியாக பள்ளெகெட்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
குளவிக்கொட்டினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாணவர்களை தெமோதர வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பள்ளெகெட்டுவ வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.