புதியவை

இஸ்லாமியப்பார்வையில் உலகம் 27- முதலில் படைக்கப்பட்டவர் முகம்மது நபி(ஸல் -)மிஹிந்தலைஏ.பாரிஸ்முதல் மனிதன்
ஆதம் நபியென்றே முழு உலகமும்
வேதம் ஓதுகிறது
முகம்மது நபியே முதல் நபியும்
முதல் மனிதப்பொக்கிஷமும் ஆவார்கள்
முகம்மது நபிகள்
உலகில் பிறக்காவிட்டால்
உலகமும் பிறந்திருக்காது
நரகமும் இருந்திக்காது
அந்த உண்மைகளை
அவர்கள் பின்வாருமாறு திருவுளமாக்குகிறார்கள்
“ஆதம் அலைஹிவஸல்லம் 
மண்ணுக்கும் தண்ணீருக்குமிடையில்
இருக்கும் போது நான் நபியாக இருந்தேன்”

ஆதமுடைய மக்களை படைக்க முன்னம்
முகம்மது என்னும்
முதல் முத்துத்தான் அகிலத்தில்
அல்லாஹ்வால் படைக்கப்பட்ட உலகின் சொத்து

மலக்கல் மவுத் மூலம்
ஆதமுடைய மக்களை படைக்கத்தான்
பூமியின் நாலாத்திசையிலிருந்தும்
மண் அள்ளிக்கொண்டு
ஏக இறைவனின் கட்டளைப்படி 
படைப்பு செய்து கொண்டிருந்தார்கள்
ஆதமுடைய குலப்படைப்பு!

முகம்மது நபியை உலகம் முழுவதுக்கும்
தூதுவராக்கும் நோக்கிலும்
மனித குலத்தில் மனிதம் விதைத்து
உற்பத்தியாக்கும் உள்ளிருப்பால்
அல்லாஹ் தாஆலா 
ஜிப்ரியீல் அலைஹிவஸலத்தை அழைத்து
பூமியின் புனிதப்பகுதியில்
வெண்மையான அந்த நடுப்பகுதில்
வெண் குருத்து மணல் 
அள்ளி வரச்சொல்லி ஏவினான்!

ஏழாவது வானத்து மலக்குகளும்
சுவர்கத்து மலக்குகளும்
அந்த வெண்மண் தலத்தில்
சூழ்ந்து காவல் இருக்கும் வேளையில்
ஜிப்ரியீல் அலைஹிவஸல்லம் அவர்கள்
பிடி மண்ணை அள்ளிக்கொண்டு
அல்லாஹ்வின் கட்டளைப்படி விரைந்தார்கள்
அதுதான் நபிகளாரின் மண்ணறையென்று
மலக்குகளே சாட்சியாவார்கள்!

அந்த சுவர்க்கத்து பிடி மணலும்
சுவனத்து ஆற்றிலிருந்து ஓடும்
அதாவது தஸ்னீ எனும் ஆற்றிலிருந்து
தண்ணீர் எடுத்து
மண் குழைக்கப்பட்டது!

குழைத்ததும் அது வெண் முத்தாகியது
அந்த முத்து
வானம் பூமி கடலென்று அழுத்தப்பட்டது
பின் முத்தையெடுத்து
ஆதம் நபியைப் படைக்க எடுத்திருக்கும் 
மண்ணோடு கலக்கப்பட்டது

முகம்மது நபியின் படைப்பையும்
அவர்களின் வரிசைகளையும்
மலக்குகள் அறிந்திருந்தார்கள்..!
ஆதமுக்கு முதல் முகம்மது நபிதான்
படைக்கப்பட்டார்கள் என்று!

அதன் உண்மைத்தன்மைகளை
உலகம் அறிய வேண்டும் என்பதனால்தான்
ஈஸா நபிக்கு வஹி இறக்கும் போது
முகம்மத்தைக் கொண்டு 
நீரும் ஈமான் கொள்ளென்று-அதாவது
நம்பிக்கை கொள்ளும் படி
அல்லாஹ் குர் ஆனில் கூறியுள்ளான்!

அதையும் தாண்டி முதலில்
அறுஷ_ படைக்கப்பட்டு 
நீரில் மிதந்து ததும்பிய போதும்
அதன் பெயரில்
லாஇலாஹ இல்லல்லாஹ_ முகம்மது றஸ_லுல்லாஹி
எனும் கலிமாவை ஓதியதும்
அறுஷ_ ஒடுங்கிப்போனது.
இவை பேன்று இன்னும்
இறைச்சாட்சிகள்   உண்டு…
முகம்மது நபிதான்
முதல் மனித முத்து என்று

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.