புதியவை

இஸ்லாமியப்பார்வையில் உலகம் 28 உலகம் கூறும் முதல் மனிதரின் ஜனனம்-மிஹிந்தலைஏ.பாரிஸ்

மலக்கல் மவுத் மூலம்
பூமிப்பந்தில் இருந்து எடுப்பட்ட மண்
எல்லா இடங்களில் இருந்தும்
எல்லா நிறங்களிலும் ஒரு பிடிக்குள்
அடங்கியது!

அது வெண்மை கறுப்பு சிவப்பு
காடு கரை கடலென்று
அனைத்திடங்களில் இருந்தும்
அல்லாஹ்வின் ஏவல் படி
அள்ளிச்செல்லப்பட்டது

மலக்கல் மவுத்தை அடுத்து
அல்லாஹ் ஏவினான்
பிடி மண்ணை பிசைக்கும் படி!
அசுத்த தண்ணீரும்
சுத்தத் தண்ணீரையும் கலந்து
மலக்குல் மவுத்
மண்ணைக் குழைத்தார்கள்!
களி மண்ணாகும் வரை

அநத் மண் பிடி
நாற்பது வருடங்கள் பிசையப்பட்டது
கெட்டியான அந்த ஈரக்களி மண்ணில்
முகம்மது நபியைப் படைக்க எடுத்து
குழைத்த வெண் முத்தும்
கலந்து ஆதமின் மண் குழைக்கப்பட்டது!

குழைத்த களி மண்ணை
சடலமாக அல்லாஹ் வடித்தான்
சடலம் நாற்பது வருடங்கள்
மலக்குகளின் வழிப்பாதையில்
அல்லாஹ் போட்டு வைத்தான்!
அதாவது மலக்குகளின்
அச்சம் தூய்மை எண்ணம்
எல்லாம் மனிதன் வாழ்விலும்
வளர வேண்டும் என்பற்காக!

மண் உலராமல்
ஈரக்களி மண்ணால் படைத்ததால்தான்
மரணம் நிலையானது என்பதை உணர்த்துகிறது

எல்லாத்திசையிலும்
வௌ;வேறு நிறங்களிலும்
எடுத்து மண் என்பனால்தான்
மனிதனின் நிறமும் வேறு பட்டது
எனும் சிந்தனையைத்தருகிறது

நல்ல மனமும்
கெட்ட குணமும் மனிதர் மத்தியில்
இருப்பதற்கு காரணம்
கலக்கப்பட்ட தண்ணீரால் ஆனது
இறைவனின் ஒரு மணி நேரம்
மனிதனின் நாற்பது வருடமாகும்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.