புதியவை

இஸ்லாமியப்பார்வையில் உலகம் 29 =ஜின்கள் ஆதம் நபியை பார்வையிட்டனர் --மிஹிந்தலைஏ.பாரிஸ்




ஆதமின் அழகிய உருவம்
பூமியில் முழுமையடைந்தது
அந்த நிமிடம் வரை படைத்திருக்கும்
படைப்புக்களில் பேரழகுப்படைப்பும்
இந்த நிமிடம் வரையும்
மனித உருவம்தான் உச்ச அழகு!

ஜின்கூட்டங்கள்
கூட்டம் கூட்டமாக பார்வையிட்டனர்
படைக்கப்பட்டிருக்கும்
உருவத்தின் அழகிய நிறைவு கண்டு
அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள்!

இதுவரை இவ்வுலகம்
காணாத கண்ணியம் நிறைந்த படைப்பென்று
பெருமிதம் அடைந்தார்கள்….!
அவர்களுடைய நீளத்தையும்
அழகிய கோலத்தையும் கண்டதும்
ஒன்றும் உரைக்காமல்
மலக்குகள் மௌனத்தில் திகைத்தார்கள்!
இறைவனின் படைப்புக்களில்
சிறப்புப்படைப்பு மனிதன்தான்!

ஆதம் நபியின் சடலம்
தண்ணீரில் மிதக்கும் 
தாமரை மொட்டுப் போல்
இந்தப் பூலோகத்தில் மிதந்தது…!
பூவாக மலரவோ
புன்னகை சிந்தவோ இல்லை
அது வரை
அவர்களின் உடலில் உயிர்
ஊதப்பட்டவில்லை!

இறைவன்
தன் விசித்திரப்படைப்புக்களின்
ஒரு ஜடத்தை உடையில்லாமல்
பார்வைப் பொருளாக வைத்திருந்தான்
ஜின்களின் கண்களில்
மண்ணில் உருவான கண்காட்ச்சிப்பொருள்தான்
அது வரை ஆதம் நபி!

ஜின்கள் ஒன்றை மட்டும்
உறுதிபட உள்ளத்தில் ஏற்றினார்கள்
தங்களையும் விட மேலான உருவம்
மனித உருவம்தான்
இறைவன் எதைச்செய்தாலும்
அதை அர்த்தத்துடன்தான் செய்வான்
இந்த ஜடமும்
எம்மினம் போல் 
இறைவனை துதிப்பார்கள்
எனும் உயர் எண்ணத்தோடு 
மௌனித்துப்போனார்கள்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.