ஆதம் நபி பூமிப்பந்தில்
ஏறியப்பட்டு உயிரை ஊத முன்
பெரும் மழையை பொழியச் செய்தான்!
ஏறிந்தான் என்பதை விட
இறக்கினான் என்பதுதான் உண்மை!
அல்லது படைத்தான் என்று
விளித்துக் கொள்ளுவோம்!
சில மணி நேரம்
துளி மழைகள் விழுந்து கொண்டிருந்தால்
உலகின் நிலை என்னவாகும்…?
உலகம் இல்லாமல் போகும்!
அன்று இறங்கிய மழை
என்றும் இறங்க வில்லை
இனிமேலும் இறங்குமோ என்னமோ தெரியாது
இறைவன் நினைத்தால் நிகழ்த்துவான்
அவை அவன் ரகசியம்!
அன்றைய கடும் மழை
நாற்பது வருடங்கள் பொழிந்தது
அடைமழை என்பதா…?
அல்லது அநியாய மழை என்பதா…?
ஓயாமல் வானம் ஒப்பாரி வைத்தது!
ஏன் அப்படியொரு மழை
மண்ணில் இறங்கியது என்று எவரும்
அறிய வில்லை!
மலக்குகள் கூட மூடர்கள் போலானார்கள்
வானத்தை அழ ஏவினான்
நிறுத்த ஏவும் வரை வானம் அழுதது!
அது ஒரு சோக மழை
ஆரம்பம் சோத்தில்தான் தொங்குகிறது
பிரசவத்தின் போது!
மனிதனின் பிரன்னம்
களி மண்ணில் என்பது வரவாறு
அதுவும் உலராத ஈரத்தன்மையில்
மண் இருக்கும் போதுதான்
விடாமழை கொட்டியது
ஆனாலும் கரையவில்லை விசித்திரம்
இறைவன் நடத்திய விந்தை அது!
சில நிமிட இடைவெளிக்குப் பிறகு
அடுத்து ஒரு மழையை இறக்கினான்
அதன் காலம் ஒரு வருடமாகும்
முன்னம் கொட்டிய மழை
சோகத்திற்காகவும் பின்னர் தூவிய மழை
சந்தோஷத்திற்காகவும்
ஆதம் நபியின் சடலத்தில் விழுந்தது
துன்பத்திற்கு பிறகு ஒரு சந்தோசம்
என்பதுதான் உள் பொருளாகும்
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.