புதியவை

இஸ்லாமியப்பார்வையில் உலகம் 34 (கவிதை) ஆதம் நபி முதலில் பேசியது



இறைவன் உயிரை ஊதிய வேளை
உயிர் மூக்குத்தண்டில் இறங்கும் போது
தும்மல் வெளியானது
அதையும் இறைவனே ஏற்ப்படுத்தினான்

அந்த நிமிடத்தில்தான்
அல்லாஹ் சொல்லிக்கொடுத்தான்
அல்லது சொல்ல வைத்தான்
ஒரு கலிமாவை
அதாவது வார்த்தையெனப்பொருளாகும்

உயிர் மூக்கிலிறங்கியதும்
தும்மல் முடிவதற்க்குள் 
வாய் வழியே உயிர் வந்ததும் 
நா அல்ஹம்து லில்லாஹி எனும்
வார்த்தையை உச்சரித்தது
அதை இறைவனே கற்றுக்கொடுத்தான்!

ஆதம் நபியவரகள்
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்றார்கள்
அனைத்துப்புகழும்
அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து
வளர்த்து பரி பக்குவப்படுத்தும்
அதிபதியான அல்லாஹ்வுக்கே எனும்
பொருளாகும்!
இன்னும் பல பொருளும்
இருக்கக் கூடும்

முதல் மனிதர் என
கருதப்படும் ஆதம் நபிகளின்
முதல் வார்த்தை அது என்பதாலோ என்னமோ
இறைவன் திருமறையில்
அல்ஃபாத்திஹாவை
கண்ணியப்படுத்தியுள்ளான்…!

மேற்க்கூறிய திருமறையின் வசனம்தான்
திருமறையில் முதலாவதும்
முக்கியதுவவும் பெறுகிறது
ஆனாலும் அகிலத்தில் தோற்வித்த வசனம்
அதுவல்ல என்பது 
அனைவரும் அறிந்த உண்மையாகும்

அதற்கு இறைவன்
ஆதம் நபியை நோக்கி இப்படிக் கூறினான்
“யர்ஹமுக றப்புக்க வலிர் றஹ்மத்தி கலக்கதுக்க”
அதாவது
உன்னுடைய இறைவன் உனக்கு
அருள் புரியட்டும்
அருளுக்காகத்தான் உன்னை 
அவன் படைத்தான் என்றும்
இன்னும் பல அர்தங்களும் இருக்கலாம்
ஏனெனில் இறைவசனம் அல்லவா….?
அவனே அனைத்தையும் அறிவான்!

ஆதம் நபியவர்கள்
முதல் வார்த்தையை உச்சரிக்கும் போது
அவர்களின் இரு கைகளையும்
தலையில் உயர்த்திக்கொண்டதாக கூறப்படுகிறது
அப்படித்தான் இறைவனை 
துதித்திருக்கலாம் எனும் ஊகமது…!
அதனால்தான் உலகில்
கைகள் கூப்பும் முறை
நடைமுறையில் வந்து விட்டது போலும்…!

முகம்மது நபி (ஸல்)
முழு உலகுக்கும் வழிகாட்டத்தோன்றும் வரை
ஆதம் நபியின் தோன்றல்கள்
அப்படித்தான் வழிபட்டார்கள்…!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.