
மத்திய டெக்ஸாஸ் பிராந்தியத்தில் பரவிய காட்டுத்தீயினால் சுமார் 400 இற்கும் மேற்பட்டு குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பின் பேரில் மத்திய டெக்ஸாஸ் பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் இடம்பெயர பணிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய மேயர் நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.
சுமார் 40 இற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிவடைந்துள்ள நிலையில் பிராந்தியத்திலிருந்து 400 இற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியியேற்றப்பட்டுள்ளதையும் அவர் உறுதி செய்துள்ளார்.
விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள பாரியளவில் வடிவமைக்கப்பட்ட விமான நீர்த்தாங்கி மூலம் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
4582 ஏக்கர் பகுதி அழிவடைந்துள்ள போதிலும் தாம் உடனடியாக காட்டுத்தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.