புதியவை

கல்முனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழப்பு

கல்முனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழப்பு



கல்முனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி 8 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
கல்முனை கல்முனைக்குடியைச் சேர்ந்த குறித்த சிறுமி தமது தந்தையின் மோட்டார் வாகனத்தில் சிக்குண்டே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வீட்டு வளாகத்திலுள்ள வாகன தரிப்பிடத்தில் மோட்டார் வாகனத்தை நிறுத்த முற்பட்ட போதே நேற்று (09) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான 8 வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் தந்தையும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.