புதியவை

இன்று முதல் வாகனங்களுக்காக 90 % குத்தகை வசதி

இன்று முதல் வாகனங்களுக்காக 90 % குத்தகை வசதிஇன்று முதல் வாகனங்களுக்காக 90 % வரை குத்தகை வசதிகளை வழங்குவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான அறிவுறுத்தல் மக்கள் வங்கியூடாக அரச மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுக்கு இன்று வௌியிடப்படும என அறிக்கையொன்றினூடாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வாகனங்களின் பெறுமதிக்கு ஏற்ப 100 % குத்தகை வசதிகள் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 70 % ஆக இலங்கை மத்திய வங்கியினால் மட்டுப்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும் இந்த நடவடிக்கையினால் சந்தைகளில் காணப்படும் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு வாகனங்களின் பெறுமதிகளுக்கு ஏற்ப 90 % குத்தகை வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சர் கூறியிருந்தார்.
எனினும் அதற்கான சுற்றறிக்கை இலங்கை மத்திய வங்கியினால் இதுவரை வெளியிடப்படாததால் அமைச்சின் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.