புதியவை

ஒரு பிள்ளை கொள்கையைக் கைவிட்டது சீனா

ஒரு பிள்ளை கொள்கையைக் கைவிட்டது சீனா

சீனாவில் கடந்த 36 வ​ருடங்களாக நடைமுறையில் இருந்த சர்ச்சைக்குரிய ஒரு பிள்ளை கொள்கை கைவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சீனத் தம்பதிகள் இரு பிள்ளைகளைப் பெற்று வளர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை வகுப்பு மத்திய செயற்குழுவின் மாநாட்டின் இறுதி நாளான இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீன அரசின் சர்ச்சைக்குரிய இந்தக் கொள்கை, பிறப்பு வீதத்தைக் குறைப்பதுடன் சனத்தொகை வளர்ச்சி வீதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய ரீதியாக 1979 ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து 400 மில்லியன் வரையில் பிறப்பினை குறைக்க முடியும் என மதிப்பிடப்பட்டது.
இதேவேளை, சனத்தொகை ஆய்வாளர்கள், சமூகவியலாளர்கள் என பலர் இந்த கொள்கை தொடர்பில் வெளியிட்ட எதிர்ப்பினை அடுத்து நாட்டின் சில மாகாணங்களில் இந்தக் கொள்கை தளர்த்தப்பட்டது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.